Published on 27/08/2019 | Edited on 27/08/2019
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![cellphones missing in arun jaitley funeral](http://image.nakkheeran.in/cdn/farfuture/IhJ6OwGwRquuFeCgOeLeTyEoYm3whbtO4Sqt0JGo2_4/1566880632/sites/default/files/inline-images/jaitl.jpg)
உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ உள்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக காஷ்மியர் கேட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.