2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான நேற்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய நிலையில், இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில், ஸ்வச் பாரத் மிஷனுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கு ரூ .12,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி இலக்கு.
சிறு நகரங்களுக்கும் மருத்துவ வசதி கொண்டு செல்வதற்கான விரிவான திட்டங்கள்.
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்.
2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
2020-21 ஆம் ஆண்டில் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ .22000 கோடி ஒதுக்கீடு.
2020-21 ஆம் ஆண்டில் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ரூ .1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.