Published on 13/03/2021 | Edited on 13/03/2021

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று தனியார் மருத்துவமனையில், கரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார்.