Skip to main content

தோனி மற்றும் கம்பீரை நெருங்கும் பாஜக... வேட்பாளராக நிறுத்த...?

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

 

aa

 

2019-ல்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆளும் பாஜக அரசு பல்வேறு திட்டங்கல்ளை தீட்டி வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இதை சமாளிக்க இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் டெல்லியை சேர்ந்த கவுதம் கம்பீர் ஆகிய இரண்டு பேரையும் நட்சத்திர பிரச்சாரத்திற்கு களமிறக்க பாஜக தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் இருவரையும் அவர்களின் சொந்த மாநிலத்தில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தோனி தேர்தலில் போட்டியிட தயங்குவதால், பாஜக மூத்த தலைவர் ஒருவர் அவரை  சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி  இருக்கிறது.    

சார்ந்த செய்திகள்