Skip to main content

ஒரு இளம் நடிகையின் எம்.பி கனவை கலைத்த பாஜக

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

கன்னட திரையுலகில் பிரபலமாகிவருபவர் நடிகை நிஷா. கன்னடத்தில் அமர், பேஸ் டூ பேஸ், தேவா, ஐ லவ் யூ, கே.ஜி.எப் 2, தேவகி, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், அதோடு மாடலிங்கும் செய்து வருகிறார். இவருக்கு திடீரென அரசியல் மீது ஆசைவந்தது. அதற்கு காரணம் அவரது குடும்பம். நிஷாவின் அப்பா சி.பி.யோகேஸ்வர், கர்நாடாகா மாநிலம் சென்னப்பட்டிணம் தொகுதியின் எம்.எல்.ஏவாக, எம்.பியாக இருந்தவர். கடந்த எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர், இவரது சகோதரர் தற்போதும் உள்ளாட்சி பொறுப்பில் இருந்து வருகிறார்.

 

mp seat

 

யோகேஸ்வர்ரை, பெங்களுரூ ரூரல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. இதனை அவரிடம் தெரிவித்தபோது, எனக்கு சீட் வேண்டாம் என் மகளுக்கு தாங்கள் என தனது மகள் நடிகை நிஷாவை முன்னிறுத்தியது. 29 வயதாகும் நிஷாவின் அழகு, சினிமா மூலம் அவருக்கு கிடைத்துள்ள பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாஜக தலைமை சரியென தலையாட்டியது. நிஷாவும் எம்.பி கனவில் பிரச்சாரத்துக்காக புதிய போட்டோக்களை எடுக்க துவங்கினார். சமூக வளைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் பரவியது, செய்தித்தாள்கள் இவரைப்பற்றி அலசி எழுத துவங்கின. இவரது ரசிகர்கள் தங்களது அழகு, கனவுக்கன்னி எம்.பியாகப்போகிறார் என கர்நாடகாவில் குதுகலித்தார்கள்.

 

 

இந்நிலையில் மார்ச் 25ந்தேதி வெளிவந்த பாஜக பட்டியலில் பெங்களுரூ ரூரல் தொகுதி வேட்பாளராக அஸ்வத்நாராயணன் என்பவரை அறிவித்தது. இது நடிகை நிஷா தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இதுப்பற்றி பாஜக மேலிடத்திடம் யோகேஸ்வர் கேட்டபோது, பெரும் தொழிலதிபரும், அமைச்சராகவும் உள்ள காங்கிரஸ் சிவக்குமாரின் தம்பி டி.கே.சுரேஷ்சை ரூரல் தொகுதியில் காங்கிரஸ் களம்மிறக்கியுள்ளது. அவரை எதிர்த்து வெற்றி பெற வேண்டும்மென்றால் சமூக ரீதியாக பலமான வேட்பாளர் தேவை. நீங்கள் பிராமனர். அதனால் தான் கௌடா சமூகத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணனை நிறுத்தியுள்ளோம் எனச்சொல்லியுள்ளார்கள்.

 

 

தனது ஆசை மகளின் எம்.பி கனவு கரைந்துவிட்டதே என நொந்துப்போய்வுள்ளார் யோகேஸ்வர். அவரைவிட அவரது மகள் நடிகை நிஷா மன வேதனையில் உள்ளாராம். தன்னை எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்போகிறார்கள் என்கிற சந்தோஷத்தில், சக திரைக்கலைஞர்களுக்கு விருந்துயெல்லாம் வைத்துள்ளார். இப்போது சீட் இல்லை என்றாகிவிட்டதால் மனம் கசந்து சோகமாக உள்ளார் என்கிறார்கள்.

 

தங்களது 28 வயது கனவுக்கண்ணியை எம்.பி சீட் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாஜக ஏமாற்றியதை நினைத்து கண்ணீர் வடித்துவருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்