Published on 18/10/2018 | Edited on 18/10/2018

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பல இந்து அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்து, போராட்டத்தில் குதித்தனர். நேற்று ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள வந்த குறிப்பிட்ட வயது பெண்களை உள்ளே நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்து கேரள பிராமணர் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தீர்ப்பில் பல பிழைகள் உள்ளதாக மனுவில் வாதம் செய்யப்பட்டுள்ளது.