சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ பாட திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படும் சமூக அறிவியல் பாடத் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து என்சிஇஆர்டி குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குழுவின் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவின் படி சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக செவ்வியல் வரலாறு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அனைத்து பாடப்புத்தகங்களிலும் இந்திய பாரம்பரிய அறிவு என்ற பெயரிலும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியாவிற்கு பதில் பாரத் என பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.