Published on 09/02/2019 | Edited on 09/02/2019
குஜராத் மாநிலத்தில் நேற்று மாலை நடைபெற்ற யோகா பயிற்சியில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ராமர் இந்து மதத்திற்கு மட்டும் உரியவர் அல்ல. இஸ்லாம் மதத்திற்கும் உரியவர். இரண்டு மதங்களுக்கும் முன்னோடி. மேலும் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு கோயில் கட்டாமல் மெக்கா மதினாவிலும், வாடிகன் நகரிலுமா கோயில் கட்ட முடியும். இந்த விஷயத்தை வாக்குகளையோ, அரசியல் ரீதியாகவோ அணுக கூடாது' என அவர் கூறினார். இந்த விவகாரம் பற்றி கடந்த வாரம் பேசியிருந்த அவர், ராமர் கோவிலை கட்ட இந்துக்கள் பேரணியாக சென்றுதான் கட்ட ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக தான் இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.