Published on 21/12/2020 | Edited on 21/12/2020

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மோதிலால் வோரா. இவர் கடந்த 19 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (21.12.2020) அவர் காலமானார்.
மோதிலால் வோரா, மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி, மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
மோதிலால் வோரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "வோரா ஜி ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் மற்றும் ஒரு அற்புதமான மனிதர்" எனக் கூறியுள்ளார்.