Published on 30/07/2018 | Edited on 30/07/2018

அரசு ஊழியர்கள், தங்களின் பெற்றோர்களையும் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் உரிய முறையில் பராமரிக்கவில்லை என்றால், அவர்களின் சம்பளத்திலிருந்து 25% வரை பிடித்தம் செய்யப்படும் சட்டத்தை அஸாம் மாநில பாஜக அரசு அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.
பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்துகொண்டு, அந்த தொகையை பெற்றோர்களுக்கு வழங்க அச்சட்டத்தில் வழிவகுக்கப் பட்டுள்ளது. அதுபோலவே மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்காமல் கைவிடும் பெற்றோர்களின் சம்பளத்தில் 15சதவீதம் பிடித்தம் செய்யப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக அசாம் மாநில அரசு இந்த சட்டத்தை கொண்டுவர உள்ளது குறிப்பிடத்க்கது.