Skip to main content

கேரளாவில் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

kerala ernakulam function incident police investigation started

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எரிவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 23 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதே சமயம் களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். களமசேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்