எஸ்.பி.ஐ-ல் போதுமான இருப்பு வைக்காதவர்களிடம் அபராதமாக வசூலித்த தொகை ரூ.235 கோடி!
பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காதோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து, அபராதமாக எடுக்கப்பட்ட தொகை ரூ.235 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானது. அதிக அளவிலான வங்கிக்கணக்குகளையும், கிளைகளையும், தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களையும் கொண்ட வங்கியும் இதுவே. இந்த வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது.
இதில் ஒரு மாதத்தில் சராசரியாக வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காதவர்களிடம் இருந்து, அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 388.74 லட்சம் வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.235.06 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச்சட்டத்தின் படி பெறப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் செயல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியால் வெளியிடப்படுள்ளது.
- ச.ப.மதிவாணன்