Published on 04/09/2019 | Edited on 04/09/2019
சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் அன்னா ஹசாரே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004இல் இருந்து 2014 வரை ஆட்சியில் இருக்கும் போது ஊழலுக்கு எதிராக போராடி வந்தவர். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நெஞ்சு பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாலும், உடல் பலவீனம் காரணமாகவும் நேற்று பூனே அருகிலுள்ள வேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தன பின்பு செய்தியாளர்களிடம் கூறிய மருத்துவர்கள், அன்னா ஹசாரேவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். அதனால் பெரிய அளவிற்கு பிரச்சனை ஒன்றும் இல்லை எனவும், வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால் வெகு விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.