குஜராத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் ரோட்டில் வைத்து பாஜகவினரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் குபேர் நகரை சேர்ந்த பெண் அரசியல்வாதியான நீத்து தேஜவானி அப்பகுதியின் பாஜக எம்.எல்.ஏ பல்ராம் தவானியை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது பல்ராமும், அங்கிருந்த அவரது தொண்டர்களும் நீத்துவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள நீத்து தேஜவானி, "எனது பகுதியில் உள்ள பிரச்னை குறித்து அவரிடம் மனு அளிக்க சென்றேன். ஆனால் அவரோ திடீரென என்னை தாக்க ஆரம்பித்தார். என் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்த என்னை கால்களால் எட்டி உதைத்தார். பின்னர் அங்கிருந்த மற்ற பாஜக வினரும் என்னை தாக்கினர். இது தொடர்பாக நான் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளேன்" என கூறியுள்ளார். மேலும் அவர் தாக்கப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH BJP's Naroda MLA Balram Thawani kicks NCP leader (Kuber Nagar Ward) Nitu Tejwani when she went to his office to meet him over a local issue yesterday. Nitu Tejwani has registered a complaint against the MLA. #Gujarat pic.twitter.com/dNH2Fgo5Vw
— ANI (@ANI) June 3, 2019