Published on 07/05/2021 | Edited on 07/05/2021
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 17,188 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12,45,028 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 73 பேர் நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். மேலும், இதுவரை 8,446 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 10,311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10,50,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.