Skip to main content

கெஜ்ரிவால் இந்த விஷயத்தில் மட்டும் எப்பொதும் முதலிடம் - அமித்ஷா பேச்சு!

Published on 23/01/2020 | Edited on 24/01/2020

தில்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் தில்லியில் மும்முனை போட்டி நடைபெறுகின்றது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே தீவிர போட்டி நிலவுகின்றது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கெஜ்ரிவால் கொடுத்து வருகிறார். அதை போலவே காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பிலும் மக்களை வசியம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அந்தெந்த கட்சியின் மாநில தலைவர்கள் முயன்று வருகிறார்கள்.



அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட  மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும் போது கெஜ்ரிவாலை கடுமையாக சாடி பேசினார். தில்லியை பாழாக்கியதில் கெஜ்ரிவால் முந்தைய காங்கிரஸ் முதல்வர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார். மேலும் பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில் கெஜ்ரிவால் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்