Skip to main content

40 நாள் குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு... மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம்... மனித நேயத்தில் உச்சம் தொட்ட ஓட்டுநர்!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020

பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக 400 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மங்களூர் நகரை சேர்ந்தவர் மணி. அவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்தார். தற்போது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும், இதயத்தில் சிறிய பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக அந்த குழந்தையை பெங்களூர் கொண்டு சென்று இதற்கான சிகிச்சையை அளிக்கவும் கூறியிருக்கிறார்கள்.



இதற்காக அவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார்கள். அவரிடம் இந்த விஷயத்தை கூறவும், அவர் தான் குழந்தையை கொண்டு செல்வதாக கூறியிருக்கிறார். இதற்காக போக்குவரத்தினை காவலர்கள் சீர் செய்துள்ளார்கள். இதனால் கிட்டதட்ட 400 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 20 நிமிடங்களில் அவர் சென்றடைந்துள்ளார். அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதற்காக அவர் ஊதியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்