Skip to main content

சர்ச்சை பேச்சு -நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை செய்தபோது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   கிரண்பேடியின் செயலாளர் சுந்தரேசன் அளித்த புகாரில் நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

n


தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

அப்போது நாஞ்சில் சம்பத்,  இந்தியாவிலேயே 22 மாநிலங்களில் பாஜக கவர்னர். இங்கே ஒரு அம்மா கிரண்பேடி. அவர் ஆணா என்றும் தெரியாது, பெண்ணா என்றும் தெரியாது. என்ன அட்டகாசம், நான் கேட்கிறேன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா நீங்கள்? என மிக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த சர்ச்சை பேச்சுக்காகத்தான் நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்