Skip to main content

சமையல் எரிவாயு துறையிலும் நுழைந்த அமேசான்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

amazon

 

பிரபல இணையவழி வணிக நிறுவனமான 'அமேசான்' சமையல் எரிவாயு துறையிலும் கால் பதித்துள்ளது.

 

பிரபல இணையவழி வணிக நிறுவனமான அமேசான், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம்  செய்துள்ளது. அதன்படி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத் தயாரிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களை (HP), இனி அமேசான் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அமேசான் இணையதளம் அல்லது செயலி வழியாகச் சென்று 'அமேசான் பே' வசதியைப் பயன்படுத்தி இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்பு தொலைப்பேசி வாயிலாக அழைத்து ஐ.வி.ஆர் முறை மூலமாக முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே இருந்தது. 

 

இது குறித்து, அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர நேருர்கர் கூறுகையில், "பலதரப்பட்ட விஷயங்களில் இணையதளப் பணப்பரிவர்த்தனையை ஏற்படுத்த, தொடர்ந்து உழைத்து வருகிறோம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமானது சமையல் எரிவாயு முன்பதிவு செய்யும் வசதியையும், பணம் செலுத்தும் வசதியையும் எளிமைப்படுத்தி, பல லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்குப் பயனளிக்கும்" எனக் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது பிரதமர் தாய்மார்களுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு' - தமிழிசை கருத்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
'This is the greatest gift the Prime Minister has given to mothers' - Tamil comments

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nn

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '''வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா என்ற இலவச கேஸ் இணைப்பு திட்டத்தை கொடுக்கும் பொழுது பிரதமர் மோடி சொன்னார் 'எனது தாய் கரி அடுப்பில் ஊதி ஊதி சமைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த புகையை தாய்மார்கள் உள்ளே இழுக்கும்போது ஏறக்குறைய 300 சிகரெட் புகைத்தால் நுரையீரலுக்கு எவ்வளவு கெடுதல் வருமோ அதே கெடுதல் இந்த புகை அடுப்பில் வருகிறது என்பதை கேள்விப்பட்டு தான் இந்த இலவச கேஸ் அடுப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதேபோல தான் இன்று விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களுக்கு இது பிரச்சனையாக இருக்கிறது என்பதனால் ஒட்டு மொத்தமாக 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது உண்மையிலேயே மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Cylinder price increase for commercial use

 

வணிகப் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று முதல் (01.12.2023) 1,968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 918 ரூபாய்க்கு விற்பனையாகிறது.