Published on 06/10/2020 | Edited on 06/10/2020
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி,"புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை இயற்றியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தற்போதைய உணவுப் பாதுகாப்பின் கட்டமைப்பை அழிக்கும். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை உத்தரப்பிரதேச மாநில அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.கரோனா பற்றி பிப்ரவரி மாதமே நான் எச்சரித்தேன்; அப்போது என்னை கிண்டலடித்தனர்." இவ்வாறு அவர் கூறினார்.