Skip to main content

உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபர் திடீரென எழுந்ததால் பரபரப்பு!

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
A man comes back to life while being taken for cremation in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஹிதாஷ். மனநலம் குன்றிய மற்றும் சிறப்பு திறன் கொண்ட இவர், ஜூன்ஜூனுவில் உள்ள மா சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இவர் திடீரென்ற சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, ரோஹிதாஷ் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, பிணவறையில் உள்ள ஃப்ரீசர்லில் ரோஹிதாஷ் சடலம் சுமார் நான்கு மணி நேரம் வைக்கப்பட்டது. ஆனால், ரோஹிதாஷ் சடலத்துக்கு யாரும் உரிமை கோராததால், பிரேதப் பரிசோதனை செய்யாமல், அறிக்கையை மட்டும் தயாரித்து காவல்துறையினரிடம் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ரோஹிதாஷை எரிப்பதற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். சுடுகாட்டிற்குச் செல்லும் வழியிலே, ரோஹிதாஷ் திடீரென்று எழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அனைவரும், குழப்பத்துடன் இருந்துள்ளனர். 

உயிரோடு இருந்தவரை இறந்துவிட்டார் என்ற தவறான முடிவெடுத்து அறிக்கை கொடுத்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில அரசு அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளை விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி ராஜஸ்தான் சுகாதாரத் துறைக்கு அறிக்கையை சமர்பித்தனர். அதன் பிறகு, அலட்சியமாக சிகிச்சை பார்த்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் பச்சார் மற்றும் அவரது இரண்டு துணை மருத்துவர்கள் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. 

சார்ந்த செய்திகள்