Published on 10/11/2020 | Edited on 10/11/2020

கரோனா பொது ஊரடங்கிற்கு பிந்தைய முதல் தேர்தல் என்பதால் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் பீகார் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவு, இன்னும் ஒரு மணி நேரத்தில் படிப்படியாக வெளியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.