ஏபிவிபி என்னும் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவ தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை தட்டிச்சென்றுள்ளது. தலைவர் பதவிக்காக ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட அன்கிவ் பைசொயாவின் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வந்து நிருபனம் ஆகியுள்ளது.
அதாவது, பைசொயா தமிழகத்திலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியை முடித்ததாக சான்றிதழ்கள் கொடுத்துள்ளார். ஆனால், இவரோ திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்று தற்போது பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இளங்கலை கல்வி கற்காமலேயே, பொய்யான சான்றிதழ்களை கொடுத்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்கு சேர்ந்த்திருப்பது தெரியவந்துள்ளது. அன்கிவ் கொடுத்த சான்றிதழில் திருவள்ளுவர் என்னும் பெயரே தவறாக அச்சிடப்பட்டுள்ளது. சரியான பாட பெயர்கள் அதில் இடம் பெறவில்லை. இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக மாணவ தேர்தலில் வெற்றிபெற்ற அன்கிவ் பைசொயா தெரிவித்ததாவது, இது காங்கிரஸ் மாணவ அமைப்பின் சதி என்று கூறியுள்ளார்.
கடந்த வாரத்தில் இதேபோன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்தலில் ஐக்கிய இடதுசாரி அமைப்பு பலத்த வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.