Skip to main content

அடுத்த கட்டத்தை எட்டிய ஆதித்யா எல்-1 விண்கலம்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

The Aditya L-1 spacecraft has reached the next stage

 

4 வது புவி வட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதே சமயம் இதுவரை ஆதித்யா எல் 1 விண்கலம் புவியின் சுற்று வட்டப்பாதை மூன்று முறை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் 4 வது புவி வட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 02.15 மணியளவில் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதே சமயம் வரும் 19 ஆம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஜனவரி 4 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்