ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் ரலாபா கிராமத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி, பாரம்பரிய ஜாத்ரா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நாடகத்தில் பேய் கதாபாத்திரம் பன்றி ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியைப் பச்சையாக சாப்பிடுவது போன்று கதைக்களம் உள்ளது.
இந்த நிலையில் ரபாலா கிராமத்தில் நடந்த நாடக நிகழ்ச்சியில் பேய் வேடம் அணிந்த நாடக நடிகர் ஒருவர், தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேடையில் உண்மையாகவே பன்றி ஒன்றைக் கொன்று அதன் கறியை பச்சையாக சாப்பிட்டுள்ளார். இது பார்வையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அத்துடன் மேடையில் பாம்புகள் மற்றும் குரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையைத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நாடக நடிகர் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் இருவரையும் கைது செய்தனர். மேலும், மேடையில் அவருடன் இருந்த மற்ற நடிகர்கள் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.