Skip to main content

வங்கி வாடிக்கையாளர்களுக்கான 'ஆட்டோ டெபிட்' சேவை! - சிக்கலை ஏற்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

credit card

 

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலரும், ஆட்டோ-டெபிட் என்ற சேவைக்கு அனுமதியளித்திருப்பார்கள். இதன்மூலம் வங்கிக் கணக்கிலிருந்து, அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் தானாகவே சென்றுவிடும். இதன்மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்தாததால், சேவைகள் தடைப்படும் நிலையைத் தவிர்க்க முடியும்.

 

இந்தநிலையில், ரிசர்வ் வங்கி, ஆட்டோ-டெபிட் முறைக்குப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இப்புதிய விதிகளின்படி, ரூபாய் 5 ஆயிரத்திற்குள்ளான கட்டணங்கள் ஆட்டோ- டெபிட் முறையில் செலுத்தப்பட வேண்டுமென்றால், சேவையை அளிக்கும் நிறுவனங்கள் ஐந்து நாட்களுக்கு முன்னரே வாடிக்கையாளர்களுக்கு 'மெசேஜ்' அல்லது 'மெயில்' மூலமாக நோட்டிஃபிகேஷனை அனுப்ப வேண்டும். அந்த நோட்டிஃபிகேஷனுக்கு வாடிக்கையாளர் அனுமதியளித்த பின்னரே, ஆட்டோ-டெபிட் மூலமாகப் பணப்பரிமாற்றம் நடைபெறும். 

 

மேலும், ரூபாய் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டணம் என்றால், 'ஒன்-டைம் பாஸ்வேர்டு' முறையில் வாடிக்கையாளர் அனுமதியளித்த பிறகே, வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வேண்டும். இதனால் வங்கிகள், தங்கள் தொழில்நுட்பத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ-டெபிட் சேவை மூலம் நிறுவனங்களுக்குப் பணம் செல்வது தாமதமாகலாம் எனக் கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்றே கடைசி - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

 

TODAY LAST- PETROL PUNK OWNER'S ASSOCIATION NOTICE

 

மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் எனவும், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். இன்று செப்.28 ஆம் தேதி என்ற நிலையில் இன்று மட்டுமே பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் தாள்கள் பெறப்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. செப்.30 அரையாண்டு முடிவு நாள் என்பதால் 29 ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால் செப்.30 வங்கிகளில் மாற்றுவது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழியர்கள் 2000 ரூபாயை பயணிகளிடம் இருந்து பெறக்கூடாது. அப்படி பெற்றால் 2000 ரூபாயை பெற்றவர்களே அதற்கு பொறுப்பு எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பேருந்தில் 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துநர்கள் பெறலாமா? - தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Can Conductors Receive 2000 Notes in Buses?-Tamil Transport Department Clarification

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. 

 

NM

 

இந்நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. நேற்றைய தினம் திருநெல்வேலி உட்பட சில போக்குவரத்து கோட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து பணிமனைகளின் சார்பில் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம், அப்படி வாங்கும் பொழுது அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்று ரூபாய் தாள்களாக மாற்றுவதில் சிக்கல் இருப்பதால் பயணிகளிடம் பக்குவமாக இது குறித்து எடுத்துக் கூறி இடையூறு ஏற்படாமல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

இந்த தகவல் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பேருந்தில் பயணிக்கக் கூடிய பயணிகளிடம் 2000 ரூபாய் தாள்களை பெறுவதற்கு நடத்துநர்களுக்கு எந்த தடையும் இல்லை. எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் தாளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.