கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள கந்திகானா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் மோக்ஷீத் அருகேயுள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி வழக்கம்போல் மோக்ஷீத் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சிறுவனின் தந்தையை அழைத்து சிறுவனை மருத்துவமனையில் சேர்க்கக் கூறியுள்ளனர்.
"ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள்..." - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்
தகவல் அறிந்து வந்த மோக்ஷீத்தின் தந்தை சந்திரசேகர், சிறுவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் தன் சுய நினைவை இழக்க, மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிற்வன் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
"ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும்?" - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்
மேலும் சிறுவன் மாரடைப்பில் இறந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.