Published on 21/09/2018 | Edited on 21/09/2018
புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே இன்று வாலிபர் ஒருவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் விசாரித்த போது ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த வாலிபர் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்று தெரியவந்தது.ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மன் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். அவருடைய மகன்தான் ராஜ்குமார் என்றும் தெரிந்தது. விசாரணைக்கு பின்னர் ராஜ்குமாரை போலீஸார் விடுவித்தனர்.