Published on 19/12/2020 | Edited on 19/12/2020
![amith sha](http://image.nakkheeran.in/cdn/farfuture/HzPM8EUR-7-FIeNf2Y1p_b27gst6v-YgJYq8iph3TNs/1608381347/sites/default/files/inline-images/sha-im.jpg)
2021 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்குச் சென்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில், பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவை தேர்தலுக்குள் மம்தா பானர்ஜி தனித்து விடப்படுவார் எனக் கூறினார். மேலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 200 இடங்களை வென்று, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஒரு எம்.பி, அமித்ஷா தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதனால், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.