Skip to main content

காங்கிரஸ் தலைவர்கள் விருப்பத்திற்கு மன்மோகன் சிங் மறுப்பு..?

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

manmohan

 

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள், மன்மோகன் சிங்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்புகின்றனர். ஆனால்,  மன்மோகன் சிங், அவர்களின் இந்த முடிவிற்கு சாதகமான பதிலை தர தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு டெல்லி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அதில் பாஜக விடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னரான தேர்தல்களில் நியமன எம்.பி யாக நியமிக்கப்பட்டு பின் பிரதமரானார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் அவரை அமிர்தசரஸில் நிற்க வைக்க முயற்சி நடப்பதாகவும், அதனை அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்’ - மத்திய அரசு அறிவிப்பு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
central govt said June 25 to be observed as Constitution black Day

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட்கள் 48 தொகுதிகளையும், ஜனசங்கம் 22 தொகுதிகளையும், காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 16 தொகுதிகளையும் கைப்பற்றியது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜ் நாராயணன் போட்டியிட்டார். இதில் ராஜ் நாராயனணை தோற்கடித்து ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், இந்திராகாந்தியின் வெற்றியை எதிர்த்து ராஜ் நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என்று கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்12 ஆம் தேதி அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹ தேர்தலில் வெற்றிபெற இந்திராகாந்தி பல்வேறு முறைகேடுகளில் ஈட்டுப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த தீர்ப்பு ஏற்படுத்திய நிலையில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் இந்திராகாந்தி. ஆனால் 1975 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி, கிருஷ்ண ஐயர் இந்திராகாந்தி மனுவைத் தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இதனால் இந்திராகாந்திக்கு நெருக்கடி அதிகரித்து, கட்டாயம் பதவி விலகி ஆக வேண்டிய சூழல் உருவானது.

இந்த சூழலில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இந்தியாவில் முதல்முறையாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். எதிர்க்கட்சி தலைவர்கள் மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டு சித்ரவதைகள் செய்யப்பட்டனர். பத்திரிக்கைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது. பிற்காலங்கள் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தியதற்காக மக்களிடம் இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டதாக  கூறப்படுகிறது. இன்றளவும் எமர்ஜென்சி கலத்தை இந்தியா நாட்டின் கருப்பு தினமாகப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக காங்கிரசுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தையே முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. இந்த நிலையில்தான், ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“மணிப்பூர் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது” - ராகுல் காந்தி எம்.பி. உருக்கம்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Manipur is divided into two Rahul Gandhi MP

கடந்த ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்பி மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் இன்று (08.07.2024) சந்தித்துப் பேசினார். இதனையடுத்து மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு ராகுல் காந்தி சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் தங்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மணிப்பூருக்கு என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இங்கு அமைதி திரும்பக் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யத் தயாராக உள்ளது. நாங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசினோம். எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறோம் என்று ஆளுநரிடம் நாங்கள் தெரிவித்தோம். ஆளுநரிடம் நாங்கள் எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினோம். 

Manipur is divided into two Rahul Gandhi MP

இங்கு வன்முறைக்குப் பிறகு இங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும், மேலும் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கு நான் விரும்பவில்லை என்று அது எனது நோக்கமல்ல எனத் தெரிவித்தேன். முழு மணிப்பூரும் வேதனையில் உள்ளது. துன்பத்தில் உள்ளது. இந்த துன்பத்திலிருந்து விரைவில் மீள வேண்டும் என்பதை இந்த பயணத்தின் மூலம் நான் புரிந்துகொள்கிறேன். அனைவரும் அமைதி மற்றும் சகோதரத்துவம் பற்றிச் சிந்திக்க வேண்டும். மாறாக வன்முறை மற்றும் வெறுப்பால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் அமைதியைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் பாசத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொல்வதைக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவராக உங்களுக்கு உதவ முயற்சிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அரசும், தேசபக்தர்களாகக் கருதும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களை அணுகி அரவணைக்க வேண்டும். மணிப்பூருக்கு அமைதியைக் கொண்டு வாருங்கள்.

மணிப்பூரில் பிரச்சனை தொடங்கியதில் இருந்து நான் மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். இங்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தேன், ஆனால் ஏமாற்றம் அடைந்தேன். நிலைமை இன்னும் எங்கும் சரியாகவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. நான் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைக் கேட்டறிந்தேன். அவர்களின் வலியைக் கேட்டேன். அவர்கள் மீது நம்பிக்கையை வளர்க்க இங்கு வந்தேன். மாநிலம் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. 

Manipur is divided into two Rahul Gandhi MP

நான் உங்கள் சகோதரனாக இங்கு வருகிறேன். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் அதற்கு உதவுங்கள். பிரதமர் இங்கு வருவதும், மணிப்பூர் மக்கள் சொல்வதைக் கேட்பதும், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நான் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக மணிப்பூர் இந்திய ஒன்றியத்தின் பெருமைக்குரிய மாநிலம். இந்த மாபெரும் சோகத்தில் பிரதமர் மணிப்பூருக்கு வந்திருக்க வேண்டும். மணிப்பூர் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும்” எனப் பேசினார்.