Published on 26/07/2022 | Edited on 26/07/2022
நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக சம்மனை அனுப்பி இருந்தது அமலாக்கத்துறை. அதைத் தொடர்ந்து, இன்று (26/07/2022) காலை 11.00 மணியளவில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி எம்.பி., மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளனர்.
ஏற்கனவே, ஒருநாள் சோனியாகாந்தி ஆஜராகிய நிலையில், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.