Skip to main content

கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர்...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

Haryana Health Minister Anil Vij being administered a trial dose of  covaxin

 

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் தன்னார்வலராகப் பங்கேற்றுள்ளார் ஹரியானா மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்.

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டன. அந்த வரிசையில் இந்தியாவில் ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது. 'கோவாக்சின்' என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடித்து இரண்டுக்கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் இன்று இதன் மூன்றாம் கட்ட சோதனை துவங்கியுள்ளது. இதில் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், முதல் தன்னார்வலராகத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். ஹரியானாவில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும்போது, அதில் தன்னார்வலராகப் பங்கேற்பேன் எனக் கடந்த வாரம் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்