சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. மேலும் ஜெயலலிதா நினைவு இல்ல அமைப்பின் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர், அமைச்சர், அரசு அதிகாரிகள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2017- ஆம் ஆண்டு ஆகஸ்ட்17- ஆம் தேதி, ஜெயலலிதா நினைவு இல்லம் தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.