stalin

தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதிய மடலில் கூறியதாவது,

Advertisment

திமுக குடும்ப கட்சி தான்.. ’பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சி’. குடும்பக் கட்சி என்று சொல்ல காரணம் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.

திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதாரப்பயிரை பாதுக்காக்கும் வேலியாக கோடித் தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.

Advertisment

தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. பருவநிலை மாறும் போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தனிக்கட்சி தொடங்குவதற்காக திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று சென்றுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.