Published on 06/06/2018 | Edited on 06/06/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் வீட்டுக்கு நடிகர் விஜய் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றுள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பகலில் கூட்டம் கூடும் என்பதால், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.