Skip to main content

ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

One more petiOne more petition in Supreme Court against Tamil Nadu Governortion in Supreme Court against Tamil Nadu Governor

 

சுதந்திரத்திற்காகவும் போராடிய சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவரும் நிலையில், தமிழக ஆளுநருக்கு எதிரான குரல்கள் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுகிறார். அரசு நியமித்த தேர்வுக்குழு பரிந்துரைப்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்