Skip to main content

தலைமைக்கு 'ஷாக்' கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

dddd

 

நாம் தமிழர் கட்சி, "வரும் சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், மீதமுள்ள 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் சரிசமமாகப் போட்டியிடுவார்கள்" என்று அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், அக்கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி திமுகவுக்கும், கல்யாணசுந்தரம் அதிமுகவுக்கும் சென்றனர். 

 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று (16.02.2021) காலை, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் - பாசறைப் பொறுப்பாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். 

 

தி.மு.க.வில் இணைந்த நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு,

 

வேளச்சேரி தொகுதி மகளிர் பாசறைச் செயலாளர் உமா, துணைத் தலைவர் முருகன், தொழிற்சங்க பாசறை மாவட்டச் செயலாளர் சோழிங்கநல்லூர் தொகுதி பெருமாள், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் கோ.டில்லிபாபு, வடசென்னை வடக்கு மாவட்டப் பொருளாளர் ரோ.சம்பத்குமார், வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் வடசென்னை வடக்கு நா.அப்துல்காதர், இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஆர்.கே.நகர் ஜெ.மணிகண்டன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் ர.மணிகண்டன், திருவள்ளுர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஜெ.தயாளன், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை இரா.செந்தில்குமார், தொண்டாமுத்தூர் தொகுதிச் செயலாளர் கோவை சசி, தொகுதி தலைவர் சகீர் சம்சுதீன், கோவை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சசிகுமார், மேட்டுப்பாளையம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் பிரபாகரன், தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த துணைத் தலைவர் செந்தில்முருகன், வீரத்தமிழர் முன்னணித் தலைவர் கருப்பசாமி, தொகுதி இணைச் செயலாளர் துரைராஜ், வீரத்தமிழர் முன்னணி துணைத் தலைவர் வெங்கடேஷ், கோவை தெற்கு தொகுதி இணைச் செயலாளர் கிருபாகரன், சிங்காநல்லூர் தொகுதி இணைச் செயலாளர் கேபிள் கணேஷ், மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளர் விஜய் வின்சென்ட், ஈரோடு தாளவாடி ஒன்றியத் தலைவர் பி.குமார், பவானிசாகர் தொகுதி துணைத் தலைவர் சசிகுமார், சேலம் மாநகர் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் கிஷோர், சேலம் வடக்கு இளைஞர் பாசறை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், திருப்பூர் வடக்கு இளைஞர் பாசறைச் செயலாளர் பாரதி, மதுரை வடக்கு இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பிரபு கண்ணன், திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதிச் செயலாளர் ச.ராஜேஸ்குமார், தேனி கிழக்கு மாவட்டம், இளைஞர் பாசறைச் செயலாளர் வடிவேலு, ஆண்டிபட்டி நகர் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் மெல்வின், இளைஞர் பாசறை முன்னாள் துணைச் செயலாளர் சிவகங்கை திருப்பதி, இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் சிவகங்கை எஸ்.பி.இளையராஜா, வாசுதேவநல்லூர் தொகுதி செய்தித் தொடர்பாளர் தென்காசி மாரிமுத்து, தஞ்சை கிழக்கு மாவட்டத் தலைவர் முருகன், வீரத்தமிழர் முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கள்ளக்குறிச்சி பாலமுருகன், வேலூர் கே.வி.குப்பம் ஒன்றிய இணைச் செயலளார் நா.சந்துரு, கே.வி.குப்பம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் பா.தென்பாண்டியன், கே.வி.குப்பம் தொகுதி மாணவர் பாசறைச் செயலாளர் அரவிந்த்குமார், கே.வி.குப்பம் ஒன்றியச் செயலாளர் அ.தயாநிதி, கே.வி.குப்பம் தொகுதி கலை, இலக்கியப் பண்பாட்டுச் செயலாளர் ரஞ்சித், கே.வி.குப்பம் ஒன்றியத் துணைச் செயலாளர் நரசிங்கராமன் மற்றும் சிவகங்கை, திருவள்ளூர், மதுரை, வேலூர், ஈரோடு, கோவை, சேலம், தென்காசி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நாகை, தென்காசி, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 1,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

 

cnc

 

இந்நிகழ்வின்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்கள் பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், இரா.ராஜீவ்காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்