Published on 21/11/2020 | Edited on 21/11/2020

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (21/11/2020) சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் அமித்ஷா காணொளி மூலம் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.