Published on 02/10/2018 | Edited on 02/10/2018

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த திருமுருகன்காந்தி இன்று மாலை விடுதலையாவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.
அவர்மீதான அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்த நிலையில் ஆவணங்கள் சிறைத்துறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திலிருந்து வேலூர் சிறைக்கு உத்தரவு சென்று இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மக்கள் கூட்டம் உள்ளிட்ட சிலவற்றை கருத்தில்கொண்டு இன்று மாலை 3.30 மணிக்கு விடுதலை செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.