Skip to main content

சத்தியம், சத்தியம் நான்... -பொன். மாணிக்கவேல்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018



ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும், ஒவ்வொரு எஸ்.ஐ.-யும், ஒவ்வொரு கான்ஸ்டபிளையும் யோசித்து நடத்தவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது. என்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும் அப்படியே அது அந்த குடும்பத்தை பாதிக்கிறது. சிலருக்கு மிகுந்த மனக்கவலைகளெல்லாம் உண்டாகிறது. சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள். ஏனென்றால் அவர்கள் சட்டத்தின் பணியாளர்களே தவிர, உயர் அதிகாரிகளின் பணியாளர்கள் அல்ல. அதிகாரிகளின் அறிவுரைகளை கேட்கவேண்டும் ஆனால் அது சட்டத்திற்குட்பட்டதாக இருக்கவேண்டும். அப்படி அது சட்டத்திற்குட்பட்டு இருந்ததென்றால் வேலையை முடித்துவிட்டு பேசாமல் போய்விடவேண்டும்.  

 

ஒரு நாளில் ரயில் பாதையில் 10 பேர் இறக்கின்றனர், ஒரு வருடத்திற்கு 3600 பேர் இறக்கின்றனர். இதனால் ரயில் என்ஜினுக்குமுன் அதிக செயல்திறன்கொண்ட கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இறப்புகளில் 4 கொலையாக இருந்தாலும் அது கவனிக்கப்பட வேண்டியதுதான். நாங்கள் அனைத்து வழக்குகளையும் 174 ஆகதான் பதிவு செய்கின்றோம். சத்தியமா, சத்தியமா முழுமனதோடு ஓய்வு பெறுகிறேன். உங்கள் ஒத்துழைப்புடன் நான் முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். எனக்கு அதிகாரிகளால் மட்டுமே பிரச்சனையே தவிர அரசாலோ, அரசியல்வாதிகளாலோ எந்த பிரச்சனையும் இல்லை. 

 

 

சார்ந்த செய்திகள்