Published on 14/12/2018 | Edited on 14/12/2018

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மதியம் 12 மணியளவில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்து உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், செந்தில்பாலாஜிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னதாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அண்ணா அறிவாலயம் வளாகத்தில் குவிந்திருந்தனர். இதனால் ஆதரவாளர்களை கடந்து அவர் அறிவாலயம் உள்ளே செல்வதற்கு வெகு நேரமானது.
18 ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலகிச்சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

