Skip to main content

பில்ராத் மருத்துவமனை சார்பில் நடந்த மை கேர்ள், மை பிரைட் குழு விவாதம்

Published on 16/08/2018 | Edited on 16/08/2018

பில்ராத் (billroth) மருத்துவமனை சார்பில் எழும்பூரில் உள்ள 'ராடிசன்' ஹோட்டலில் 'மை கேர்ள்  மை பிரைட்' (My Girl, My Pride) கருத்தரங்கம் ஆகஸ்ட் 14 மாலை  4 அளவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியா, திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம், ஃபென்சிங் விளையாட்டில் உலகளவில் 50 இடத்திற்குள் இருக்கும் பவானி தேவி, பில்ரோத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநரான டாக்டர். வி. ரஜினி, நேட்சுரல்ஸ் ஸ்பா மற்றும் சலூனின் தலைமை அதிகாரி சி.கே. குமரவேல் ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர். இந்த நிகழ்வை  'தி நியூஸ் மினிட்' துணை ஆசிரியர் ஆனா ஐசக் ஒருங்கிணைத்தார்.

 


 

billroth



 

 


இதில் பேசிய நேட்சுரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சி.கே. குமாரவேல், என்னிடம் சில இல்லத்தரசிகள் கூறுவார்கள் நாங்கள் எப்படி தனியாக சமாளிப்பது, கணவன் அல்லது அப்பாவின் உதவிகள் இல்லாமல் எங்களால் சமாளிக்க முடியவில்லை என்று, அதற்கு நான் கூறினேன், போதும் இதுவரை அவர்களின் உதவிகளை நாடியது, நீங்கள் உங்களின் சொந்தக்கால்களில் நில்லுங்கள் என்று. நான் இப்போது பல “இல்லத்து கணவர்களை” உருவாக்கியுள்ளேன். ஏனென்றால் தற்போது பல பெண்கள் சுயதொழில் செய்கின்றனர், சுயமாக நிறைய வருமானம் ஈட்டுகிறார்கள். இதனால் கணவன்மார்கள் அவர்கள் மீது பொறாமை கொள்கின்றனர். என்று கூறினார்.



திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனருமான அறிவழகன் வெங்கடாசலம்  பேசுகையில், வீட்டில் பெற்றோர்களே ஆண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும், பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டிற்கு பாத்திரம் கழுவுவதில் ஆரம்பிக்கிறது இந்த சிக்கல், ஆண் பிள்ளையை பாத்திரம் கழுவ விடுவதில்லை, பெண் பிள்ளையை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள், ஆண் இப்படிதான் இருக்கவேண்டும், பெண் இப்படிதான் இருக்கவேண்டுமென குழந்தைகளுக்கு தவறாக கற்பிக்கப்படுகிறது. என கூறினார்.

 

 


நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியா கூறியது. ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் ஒரே மாதிரியாக வளர்க்க வேண்டும். பையனுக்கு இரண்டு இட்லி அதிகமாக வை அவன் ஆம்பள பையன் இந்த கதையெல்லாம் இனிமேல் சொல்லாதிங்க  பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி. இரண்டு குழந்தைகளையும் சமமாக வளருங்கள். எங்களின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவே நாங்கள் போராடுகிறோம். 


டாக்டர். வி. ரஜினி,  குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை சொல்லிக்கொடுங்கள், அப்போதுதான் அவர்கள் ஒரு செயலை செய்யுமுன் இது மற்றவர்களை காயப்படுத்துமா என்பதை சிந்திப்பார்கள்... பாதுகாப்பான வழிமுறைகளை கற்பியுங்கள். என கூறினார்.
 
 

billroth




ஃபென்சிங் விளையாட்டு வீராங்கனை பவானி தேவி கூறியது, உங்களுக்கு தெரியவேண்டும், என்ன தேவை என்பதை குறித்து நான் உறுதியாக நம்புகிறேன், விளையாட்டு உங்களின் மன உறுதி, சுயசிந்தனை, சுயமரியாதை ஆகியவற்றை அதிகரிகரிக்கும். உங்களுக்கு எது சரியென தோன்றுகிறதோ அதை நோக்கி நகருங்கள், ஒருவேளை அது தவறாக இருந்தால் பின் சரிசெய்து கொள்ளலாம். ஆனால் அதை நோக்கிய முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு, முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்து கற்பிக்கவேண்டும். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்