Published on 14/09/2020 | Edited on 14/09/2020

அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை உடனே அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் வரும் நாட்களில் வெங்காயம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.