Skip to main content

நீட்டாக குழிபறிக்கும் கூட்டணி! -அதிரவைக்கும் ஆர்.டி.ஐ. ஆதாரம்!

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
neet




தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதற்காக 18-2-2017 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், அந்தக் கோப்பு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. 


மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் 2017-ல் அனிதா வும், 2018-ல் பிரதீபாவும் நீட் கொடுமைக்கு உயிர்ப் பலியானார்கள். ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது. நீட் ஆதரவாளர்களோ இவை எல்லாமே கல்வியில் ஊழலை ஒழிக்கவும், தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்கவும், பாடத்தின் தரத்தை மேம்படுத்தி, தகுதியானவர்களை டாக்டராக்க வும் எடுக்கப்படும் முயற்சி என்றும், இதனால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பலன் அதிகம் என்றும் வாதாடினர். ஆனால், கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமல்ல, அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் டியூஷனில் படித்த நடுத்தர வர்க்கத்து மாணவ-மாணவியருக்கு பெப்பே காட்டி, சி.பி.எஸ்.இ. என்கிற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே டாக்டர் சீட்டுகளை உறுதி செய்கிறது நீட் தேர்வு.


+2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மருத்துவ- பொறியியல் படிப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நகரப்புறத்தைப் போல கிராமப்புற மாணவர்களும் டாக்டராக, இன்ஜினியராக உயர்ந்தனர். அதே நேரத்தில் தனியார் கல்லூரிகள் லாப நோக்கத்துடனும் கட்டமைப்புகள் இன்றியும் தொடங்கப்பட்டு வணிகரீதியில் செயல்படுவதையறிந்து,  நீட் தேர்வை அறிமுகப்படுத்தப் போவ தாக 2013-ல் இந்திய மருத்துவக் கவுன்சில் குரல்கொடுத்தது. இதை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றம் சென்றநிலையில், 2016-ல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு கட்டாயமென தீர்ப்பளிக்கப்பட்டது. 


தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் தேர்வை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டில் எதிர்ப்பு அதிகமானது. காரணம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம். அதில் பயின்று டாக்ட ராகி சிறப்பாகப் பணியாற்றும் ஏழை-கிராமப்புற-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஏராளம். கலைஞர் ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு இத்தகைய டாக்டர்களாகும் வாய்ப்பு அமைந்தது. 

 

neet


ஜெ.வும் நீட் தேர்வுக்கு எதிராக நின்றார். ஆனால், அவர் அப்பல்லோவில் சிகிக்சையில் இருந்தபோதே நீட் கட்டாயம் எனும் மத்திய அரசின் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இத னால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டு, வடஇந்திய, மேல்தட்டு மாணவர்களுக்கான வாசல் திறக்கப்பட்டது. நீட் தேர்வின் பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. மாநிலக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்களிடம் தனியார் நிறுவனங்கள் நீட் டியூஷன் என லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கத் தொடங்கின. இதுகுறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு மழுப்பலையே பதிலாக தெரிவித்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் இலவச சீட்டுகளை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைக்காதபடி செய்துள்ளது நீட் தேர்வு.


தனது கிராமத்திற்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வையும் ஜிப்மர் நடத்திய சிறப்புத் தேர்வையும் எழுதி சட்டப் போராட்டங்களில் இறங்கி, நீட்டுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்குபெற்றவர் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா. அவரது தற்கொலை தமிழகத்தையே அதிரச் செய்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, மூட்டை தூக்கி வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளியின் மகளான அனிதா +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.  நீட் தேர்வு இல்லையென்றால், சென்னை எம்.எம்.சி. போன்ற முதன்மையான அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருக்கும். அவரது மருத்துவக் கனவையும் உயிரையும் சிதைத்துவிட்டது நீட்.


தேர்வு மையங்களில் பரிசோதனை என்ற பெயரில் நடந்த அராஜகமே பல மாணவர்களை மனரீதியாக அச்சுறுத்தியது.


நீட் தேர்வு எழுதிய 5000 தமிழக மாணவர்களுக்கு, கர்நாடகம், கேரளம், ராஜஸ்தான் மாவட்டங்களில் இடம் ஒதுக்கியது சர்ச்சைக்குள்ளானது. திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, மகனுக்கு துணைசென்ற நிலையில் கேரளாவிலேயே இறந்துபோனார். நீட்  தேர்வால் டாக்டருக்குப் படிக்க முடியாமல் போன விழுப்புரம் மாவட்டம் பிரதீபா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். 

2018-19 நீட் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ. போர்டு பல்வேறு குழப்படிகளைச் செய்திருந்தது. கிட்டத்தட்ட 49 கேள்விகள் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களை கலங்கச் செய்தது. சட்டரீதியான முயற்சிகளும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில்தான், தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோவையைச் சேர்ந்த வே.பாஸ்கரனும், திருநெல்வேலி வழக்கறிஞர் அப்பாவுரத்தினமும் கடந்த 2018-19 கல்வியாண்டில் தமிழகத்தில் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் நீட் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்களைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற தகவல்களோடு, நீட் தேர்வுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது வெளிப்படும் உண்மை நம்மை நிலைகுலையச் செய்வதாக உள்ளது. (காண்க: அட்டவணை)


அரசாங்கப் பள்ளியில் படித்து அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை,

 நீட் வருவதற்கு முந்தைய மூன்று கல்வியாண்டுகளில் 22, 33, 27 என இருந்தது, 

நீட் தேர்வுக்கு பிறகு (2018-2019)  வெறும் 4  எனச் சரிந்திருக்கிறது.

அரசாங்க உதவிபெறும் பள்ளியில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 

நீட் வருவதற்கு முந்தைய மூன்றாண்டுகளில் 0, 59, 58 என உயர்ந்தது, 

நீட் தேர்வுக்கு பிறகு 3 ஆகச் சரிந்திருக்கிறது.

தனியார் பள்ளியில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில்  இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் : 

நீட் வருவதற்கு முந்தைய மூன்றாண்டுகளில் 2226, 2247, 2321 ஆக இருந்தது, வெறும் 20-ஆக அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. இவர்கள் எல்லோருமே மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.


 

neet



சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை... நீட் தேர்வுக்கு முன்பு 0, 0, 14 என்று மட்டுமே இருந்தது,  நீட் தேர்வுக்குப் பின் 611 ஆக மலை அளவுக்கு உயர்ந்திருக்கிறது.. 
 

அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கணக்கில்கொண்டால்... அரசாங்கப் பள்ளியில் படித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை... 
 

நீட் தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 12, 3, 3 என இருந்தது, 
 

நீட் தேர்வுக்குப் பின் 1 ஆகச் சரிந்திருக்கிறது.
 

அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் படித்து, தனியார் மருத் துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை...
 

நீட்தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 0, 16, 26 என இருந்தது,
 

நீட் தேர்வுக்கு பிறகு பூஜ்ஜியமாக சரிந்திருக்கிறது. 
 

தனியார் பள்ளியில் (மாநிலப் பாடத்திட்டம்) படித்து, தனியார் மருத் துவக் கல்லூரியில் இடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை... 
 

நீட் தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 798, 657, 1173 ஆக இருந்தது, 
 

நீட் தேர்வுக்குப் பின் 3-ஆக தரைமட்டமாகி யிருக்கிறது. மாறாக, சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து தனியார் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 
 

நீட் தேர்வுக்கு முன்பு 2 மற்றும் 21 என்ற அளவிலேயே  இருந்தது,
 

நீட் தேர்வுக்குப்பின் 283 ஆக உயர்ந்திருக்கிறது.
 

தமிழக மாணவர்களை நீட் தேர்வு கொடூரமாக வஞ்சித்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இந்தக் கொடுமையிலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைக் குப்பைக்கூடையில் வீசிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு குழிபறித்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது மாநிலத்தை ஆளுங்கட்சியான அ.தி.மு.க.  
 

-கீரன், சுப்பிரமணி

 

 


 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.