Skip to main content

“ஏமாற்றிவிட்டார்” - திடீர் போராட்டத்தில் குதித்த சோனா

Published on 24/03/2025 | Edited on 24/03/2025
sona in protest

பிரபல நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘ஸ்மோக்’. ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் அவரே இந்த சீரிஸை தயாரித்தும் உள்ளார். 

இந்த சீரிஸ் சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த சீரிஸின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி வெளியிடப்படவில்லை. இருப்பினும் புரொமோஷன் பணிகளை சோனா தொடங்கி சமீப காலமாக நிறைய பேட்டிகள் கொடுத்து வந்தார். 

இந்த நிலையில் சோனா ஸ்மோக் வெப் சீரிஸின் ஹார்ட் டிஸ்கை தனது மேலாளர் தர மறுப்பதாகக் கூறி சென்னை ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். அதில் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர், ரூ.8 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்