Skip to main content

வேட்டையாடும் தீ! வெந்து கருகிய 50 கோடி உயிர்கள்! பருவநிலை மாற்றத்தின் கொடூரம்!

Published on 07/01/2020 | Edited on 08/01/2020

க்கிரமாக வேட்டையாடிய காட்டுத்தீயில் இருந்து தப்பித்துவிடும் முயற்சியில் தோல்வியுற்றதால் கம்பிவேலியை பிடித்த நிலையிலேயே கரிக்கட்டையாக நிற்கும் கங்காருவின் புகைப்படம்  உலகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது.    இந்த ஒரு கங்காரு மட்டுமல்ல, ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 50 கோடி விலங்கினங்கள் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல்கள் பேரதிர்ச்சியை தருகின்றது.

 

f

 

பருவநிலை மாற்றம் காரணமாக இப்பூமி மிகவும் கொடூரமான இயற்கை பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில் அமேசான், இந்தோனேசியா காடுகள் எரிந்த கவலையில் இருந்து மீள்வதற்குள் ஆஸ்திரேலிய காடுகள் எரிந்துகொண்டிருப்பது சூழலியல் ஆர்வலர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.   ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம்.  இக்காலங்களில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான்.  ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் கொடூரம் முகம் கொண்டது.  கடந்த செப்டம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ உண்டானதாக கூறப்படுகிறது.  காற்று அடிக்கும் திசையெல்லாம் இத்தீ பரவியதை அடுத்து குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களிலும் பற்றி எரிகிறது.  சிட்னி வரை  காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இத்தீயின் கோர நாக்குகளால் 15 மில்லியன் ஏக்கர் நிலங்கள் . நாசமாகியுள்ளன.  50 கோடி உயிரினங்கள் இறந்ததாகவும், 24 மனிதர்கள் பலியானதாகவும் வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கின்றன.  

 

f

 

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன வாழ்ந்ததாக கணக்கில் கொண்டே 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆஸி’யின் பல்லுயிர் வல்லுநருமான கிறிஸ் டிக்மேன் தெரிவித்துள்ளார்.  ஆனால், ’’நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. காட்டுத்தீயோ நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து விக்டோரியா மாநிலத்திற்கும் பரவிவிட்டது. கிறிஸின் மதிப்பீட்டில் வெறும் மூன்று மில்லியன் ஹெக்டேர்கள் நிலப்பகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலப்பகுதி அதை எப்போதோ தாண்டிவிட்டது. அதனால், தற்போது வெளிவந்துள்ள மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான விலங்கினங்கள் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது’’என்கிறார் யார்க் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் கொலின் பீல்.

 

Australia


  
கடந்த மூன்று மாதங்களாக எரியும் காட்டுத்தீயில் 400 வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 3000 துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனாலும் தீயினை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பருவநிலை மாற்றத்தினால் இந்த அசம்பாவீதம் நடந்திருப்பதாக கூறப்பட்டாலும்,  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவீதம் ஏற்படாமல் தடுத்திருக்கலாம் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

 

f


இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் அமெரிக்காவைச்சேர்ந்த 20 வயதான இளம்பெண்,  காட்டுத்தீயினால் 50 கோடி உயிரினங்களை இழந்த ஆஸ்திரேலியாவிற்கு நிதி சேகரிப்பதாக கூறி, ஒவ்வொருவரும் 10 டாலர் தருமாறு கேட்டுக்கொண்டார்.  அதற்கு பரிசாக டுவிட்டர் பக்கத்தில் தனது நிர்வாணப்படத்தை வெளியிடப்போவதாகவும், தெரிவித்திருந்தார்.  சொன்னது போலவே அப்பெண் டுவிட்டரில் நிர்வாணப்படத்தை வெளியிட்டார். எதிர்பார்த்ததுக்கும் மேலாக, 7 லட்சம் டாலர்கள் நிதி சேர்ந்தது.  ஆனால், அதற்குள் அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுவிட்டது.  

 

f


வெப்பத்தின் காரணமாக காடுகள் எரிந்துகொண்டிருக்கும் நிலையில், வெப்பத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. நாட்டின் பல பகுதிகளில் சிகப்பு நிறமாகவும், புகை மண்டலமாகவும் தெரிகிறது.   ஆஸ்திரேலியாவில்.  சிட்னியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் நிலையைத் தாண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

 

f

 

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது கோலாகலமாக நடக்கும் ஒரு விழா. ஆனால், இந்த ஆண்டு பல மாகாணங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.  ஏற்கனவே இருக்கும் வெப்பநிலையால் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், பட்டாசுகள் வெடித்து மேலும் வெப்பத்தை உண்டாக்காமல் இருப்பதற்குத்தான் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.  

 

f


காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தினால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.  விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து வருகின்றனர்.  கோடான கோடி விலங்குகளும், பறவைகளும், பூச்சி இனங்களும் இந்த காட்டுத்தீயில் வெந்து சாம்பல் ஆகிவிட்ட நிலையில்,  தீயணைப்பு படை வீரர்களாலும், தன்னார்வலர்களாலும்  காப்பாற்றப்பட்ட சில கோலாகரடிகள், கங்காருவின் புகைப்படங்கள் வெளியாகி கொஞ்சம் ஆறுதலைத்தருகின்றன.  பிரபல மாடலும், தீயணைப்பு வீராருமான சாம் மேக்லோன் காட்டுத்தீயில்  தாயை இழந்து தவித்த கங்காரு குட்டி ஒன்றை மீட்டு, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  அப்படம் ஒரு பக்கம் ஆறுதலைத் தந்தாலும், மனசை பிசைகிறது.

 

ஃப்

 

கருகிக்கிடக்கும் உயிரினங்களும், சாம்பலாகிக்கிடக்கும் காடுகளும், உலகத்திற்கு பருவநிலை மாற்றத்தின் கொடூரத்தை காட்டி அபாய சங்கை ஊதி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

 

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; பிரதமர் நிவாரணம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A terrible fire at a firecracker factory in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.