
ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி இன்று (24-03-25) விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டெல்லி கேபிட்டல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து களமாடியது. மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடித்து 72 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதையடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடித்து 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த இருவரின் ஆட்டத்தால், அணியின் ரன்கள் வேகமாக கூடின. இதனையடுத்து வந்த வீரர்கள், சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். இறுதியில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் மட்டுமே அடித்து 29 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்தாக வந்த அசுதோஷ் ஷர்மா 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 66 ரன்கள் எடுத்தார். விப்ராஜ் நிகம் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து 39 ரன்களில் அவுட்டானார். இறுதியில், 19.3 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பில் டெல்லி அணி 211 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், லக்னோ அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியுள்ளது.