Skip to main content

வரலாற்று சாதனை படைத்த வங்கதேச அணி...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

 

bangladesh achieves its highest odi total against australia

 

 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஃபின்ஞ் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்கள் விளாசினார்.

382 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. பிறகு முஷ்பிகுர் ரஹீமின் 102 ரன்கள், முகமதுல்லா அடித்த 69 ரன்கள் என 300 ரன்களை கடந்து நிதானமாக சென்ற வங்கதேசத்தின் ஆட்டத்தில், குல்டர் நைல் வீசிய 46-வது ஓவரில் முகமதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வங்கதேச அணியின் வெற்றி கனவை தகர்த்தனர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 333 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேச அணி தோல்வியை தழுவினாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் நேற்று தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.