அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனிடையே இது தொடர்பாக அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் சாரில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த மூன்று வழக்குகள் தொடர்பான விசாரணையும் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தனித் தனி அமர்வாக விசாரிக்கப்பட்டு வந்தால், வழக்கின் விசாரணையில் காலதாமதம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படக்கூடும். அதனால் அனைத்து வழக்குகளும், மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் தலைமையிலான அமர்வு ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியே விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மூன்று வழக்குகளிலும் அடிப்படை ஆதரவற்ற வகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது