
பிரெஞ்ச் அதிபரின் முகத்தில் அவரது மனைவி அறைவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரெஞ்ச் நாட்டு அதிபராக இம்மானுவேல் மக்ரோன் பொறுப்பு வகித்து வருகிறார். இவரும், இவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இவர்கள் இருவரும் நேற்று வியட்நாமுக்கு வந்தனர். ஹனோய் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பிரெஞ்ச் அதிபர் இம்மானுவேல் முகத்தில் அவரது மனைவி அறைவது போன்ற காணொளி வெளியானது.
அந்த காணொளியில், விமானக் கதவு திறக்கும்போது அதிபர் இம்மானுவேலின் பாதுகாப்பு அதிகாரி வெளியே வருகிறார். கதவு திறந்திருப்பதை உணராத அதிபர் இம்மானுவேலை, விமானக் கதவின் பின்னால் மறைந்திருந்த அவரது மனைவி பிரஜிட் மக்ரோன் தனது ஒரு கைகளையும் முகத்தில் வைத்து தள்ளுகிறார். மக்ரோன் சற்று நேரம் நிலைதடுமாறினார். அதன் பின்னர், உடனடியாக அமைதியடைந்து வரவேற்கும் குழுவை நோக்கி கை அசைக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதிபரும் அவரது மனைவியும் ஒன்றாக படிக்கட்டுகளில் இறங்கினர். அப்போது, கைகளை கோர்ப்பதற்காக அதிபர் இம்மானுவேல் தனது கைகளை நீட்டினார். ஆனால், பிரிஜிட் மக்ரோன் அதனை நிராகரித்து நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விமானக் கதவின் பின்னால் நின்று கொண்டு, அதிபர் இம்மானுவேல் முகத்தில் அறைந்தவர் சிவப்பு நிற ஆடைகள் அணிந்திருந்தால், அந்த நபர் அதே நிற ஆடை அணிந்திருந்த அவரது மனைவி தான் ஊகங்கள் தெரிவிக்கிறது. நீண்ட சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் என்று அதிபருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.